எம்மைப்பற்றி

எம்மைப்பற்றி

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதில் நேர்மையான, நியாயமான மற்றும் முற்போக்கான சிந்தனை செயல்முறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவ்வை அறநெறி பாடசாலை தொடங்கப்பட்டது. எந்தவொரு சூழ்நிலையையும் நெகிழ்திறனுடனும் இரக்கத்துடனும் எதிர்கொள்ள இளைய தலைமுறையினரை சித்தப்படுத்துவதும், சக மனிதர்களிடமும் சுற்றுச்சூழலினதும் ஒரு வலுவான நனவுணர்வை வளர்ப்பதே எங்கள் நோக்கம். அர்த்தமுள்ள மற்றும் எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்கான எங்களின் ஆர்வம் எங்களை இங்கு கொண்டு வந்துள்ளது, யாம் கற்றுக்கொண்டவற்றை இந்த பயணத்தில் பரப்புவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.



இலட்சிய நோக்கு

எதிர்கால தலைமுறையினரை தன்னிறைவு பெறச் செய்வதற்கும், அனைத்து வளங்களையும் திறம்பட மற்றும் பொறுப்புடன் பயன்படுத்த அவர்களைச் சித்தப்படுத்துவதற்கும் உதவுதல். உயர்ந்த அறநெறிமுறைகளைக் கொண்ட சமூகத்தை உருவாக்க முனைதல்.



குறிக்கோள்

  • இயற்கையை நேசிக்கும் மற்றும் சக மனிதர்களை மதிக்கும் இளைய தலைமுறையை உருவாக்குதல்.
  • அறநெறிமுறைகள், மதிப்புகளின் மகத்துவத்தை உணர்வது மற்றும் அதனை பயிற்சி செய்வது.
  • மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அவற்றை மேம்படுத்துதல்.
  • அனைத்து இயற்கை வளங்களையும் திறம்பட நிர்வகித்தல் மற்றும் வளப்படுத்துதல்.
  • கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் செழுமையையும் மகத்துவத்தையும் கற்றுக்கொள்வது
  • குடும்பம், நண்பர்கள் மற்றும் ஆரோக்கியமான சமூகத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது
  • உள்நாட்டு, பன்னாட்டு மற்றும் பூகோள அரசியலின் முக்கியத்துவத்தையும், சிக்கல்களையும், நுணுக்கங்களையும் அறிய முயல்வது
  • தனித்துவத்தை ஊக்குவிப்பது


முன்முயற்சி எடுப்போம்

அறம் சார்ந்த இயற்கை வழி வாழ்வியலை அடுத்த தலைமுறையினருக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் அறிமுகப்படுத்த ஒரு முன்முயற்சி எடுப்போம்.