துரை. மணிகண்டன் - இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர், மதுரைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றபின் 1998 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். கப்பல் போக்குவரத்து துறையில் ஈடுபடுவதற்கான ஆர்வம் அவரை சரக்கு பெட்டக கப்பல் நிறுவனத்தில் சேர்த்தது, ஆரம்ப ஆறு வருட காலங்கள் பல்வேறு இடங்களில் வெவ்வேறு பொறுப்புகளை மேற்கொண்டார். கப்பல் போக்குவரத்து மற்றும் பன்னாட்டு வணிகத்தில் திறன்களை வளர்த்துக்கொண்டு இறுதியாக ஓர் உலகளாவிய கப்பல் நிறுவனத்தில் தென்னிந்திய பொறுப்பாளராக பத்து ஆண்டுகள், 2018 வரை நிர்வகித்தார். உற்சாகமான விளையாட்டு வீரர். மரபுவழி மருத்துவமான அக்குபங்சர் மருத்துவம் கற்று பயிற்சி செய்கிறார். மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். குழந்தைககள் மற்றும் இளைய தலைமுறையினர் தன்னம்பிக்கையோடும் பகுத்தறிபவர்களாகவும் இருக்க உதவுவதற்கும் வளர்ப்பதற்கும் உள்ள விருப்பம், இந்த கற்றல் மையத்தை அமைக்க உந்துதல் அளித்துள்ளது.
இந்த வாழ்க்கை பயணத்தில் மிகச்சிறந்த சில ஆளுமைகளை சந்தித்ததில் அவர் மகிழ்ச்சியும் அமைதியும் பெற்றிருக்கிறார், மேலும் அவர்களில் சிலரை தனது வழிகாட்டிகளாகக் கொண்டிருப்பது பாக்கியம் என்றும் கருதுகிறார்.
சந்தீப் சிபல் - மிகவும் ஈர்க்கப்பட்ட தலைவர், நவீனமானவர் ஆனால் எளிமையானவர், தொலைநோக்கானவர் ஆனால் யதார்த்தமானவர், தீர்க்கமானவர் ஆனால் ஆதரவானவர். ஒரு சிறந்த தலைவருக்கு உதாரணமானவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச பொறுப்புகளை நிர்வகித்து வருகிறார், தற்போது உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவராக சிங்கப்பூரில் பணியாற்றுகிறார்.
போஸ் கே முகமது மீரா – ஒர் மிகச்சிறந்த இயற்கை வாழ்வியலாளர் மற்றும் குணமாக்கும் கலை நிபுணர். தனது எளிய வாழ்க்கை முறை மற்றும் அறிவுப்பகிர்தலின் மூலம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக உடல் மற்றும் மன ஆற்றலின் தன்மை மற்றும் அவற்றை மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை மிகச்சிறந்த முறையில் ஏற்படுத்தி வருகிறார். கம்பம் அகாடமி ஆஃப் அக்குபஞ்சர் குழுமத்தின் இயக்குனராகவும், அக்குபஞ்சர் ஹீலர்ஸ் கூட்டமைப்பு (இந்தியா) எனும் அமைப்பின் தலைவராகவும் பொறுப்புகள் வகித்து வருகிறார். அவர் ஒரு பயிற்சி பெற்ற தற்காப்புக் கலைஞர்.
எனது மனமார்ந்த நன்றியினை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் சமூக நல விரும்பிகளின் பங்களிப்பிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்,
வசந்த் பீட்டர், முதல்வர் - சங்கீத் இசைப்பள்ளி
எமிலி எஸ். டைட்டஸ், முதல்வர் - சிஎஸ்ஐ மோனகன் மேல்நிலைப்பள்ளி
உமர் ஃபாரூக், முதல்வர் - கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர்,
எம்.சி. ராய் - நிர்வாக இயக்குநர், டி 2 டி லாஜிஸ்டிக்ஸ்
ரவி வர்மன் - பொது மேலாளர், டீம் குளோபல்
பிரவீன் கல்யாண் மற்றும் குடும்பத்தினர்